×

சிதம்பரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்: திராட்சைக் கொடி பந்தலும், 10 ஆயிரம் வளையல்களும், அம்மனுக்கு அணிவிப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் வெகு சிறப்பு வாய்ந்தது. தொன்மையான இந்த பழமை வாய்ந்த கோவிலில் ஒவ்வொரு மாத அம்மாவாசை அன்றும் பூஜையின் போதும் வெகு சிறப்பாக பூஜைகள் நடைபெற்றது. அங்காளம்மனுக்கு காலையில் பால் தயிர் சந்தனம் தேன் அபிஷேகம் செய்யப்பட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் அம்மாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவத்தில் சிறப்பாக ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பாள் ஊஞ்சல் உற்சவத்தில் காட்சியளிப்பார் தற்போது இந்த மாதம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்ணாடி வளையல்கள் கொண்டு ஊஞ்சல் உற்சவத்தில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் நெய்வேத்திய வழங்கப்பட்டது.

The post சிதம்பரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம்: திராட்சைக் கொடி பந்தலும், 10 ஆயிரம் வளையல்களும், அம்மனுக்கு அணிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Sri Angala Parameswari ,Amman ,Cuddalore ,Angala Parameswari Temple ,
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்